சினிமா ரசனை

ஆசிரியர்: கருந்தேள் ராஜேஷ்

Category சினிமா, இசை
Publication தி இந்து
Book FormatPaperback
Pages 208
First EditionJan 2016
Weight200 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$9.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

" வாழும் கலைகளில் மிக இளமையானது திரைப்படம். பிறந்து 100 ஆண்டுகளே ஆனா இக்கலை, பல நூறு ஆண்டுகளைக் கடந்து இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் இசை, ஓவியம், சிற்பம், நாடகம் போன்றவற்றையும் விட மிக வலிமையான கலையாக மாறியிருக்கிறது. எல்லா நுண் கலைகளையும் தன்னுள் அனுமதிக்கும் திரைப்படம், அவற்றை வாழ வைப்பதிலும் அதற்கு இணை அதுவேதான். இப்படிக் கலைகளிலும் சங்கமமாக சினிமா இருந்தாலும் அதன் தனித்துவமும் ஆற்றலும் அதன் காட்சிமொழி உருவாக்கும் தீவிரத் தாக்கத்தில்தான் அடங்கியிருக்கிறது.
நம்மிடையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த சினிமாவை நாம் விலைகொடுத்து ரசிக்கிறோம். அதனால், கொடுக்கும் விலைக்கு அது நம்மை திருதிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த மனப்பாங்கால் சினிமாவை வெறும் பொழுபோக்காக மட்டுமே பார்க்கப் பழகிவிட்டோம். "ரசிகர்கள் கேட்பதையே நாங்கள் கொடுக்கிறோம்" என்று சினிமா எடுப்பவர்கள் கூறுகிறார்கள். இந்தப் புள்ளியிலிருந்துதான் நம் சினிமா ரசனை நசுங்கத் தொடங்கியது.."


உங்கள் கருத்துக்களை பகிர :