சுட்டிகளின் கோயில் விசிட்

ஆசிரியர்: பிரபு சங்கர்

Category சிறுவர் நூல்கள்
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
$1.75      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

குழந்தைகளுக்கு புதிதாக எதையாவது சொல்லும்போது, அவர்கள் ஏன்? எப்படி? என்ற கேள்விக்கணையோடுதான் அவற்றை அணுகுகிறார்கள். அதுதான் அறிவுத்தேடலின் ஆரம்பம். பிரகலாதன், அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரத மகரிஷி சொன்ன பாடங்களைக் கேட்டு அறிவில் சிறந்தவனாக வளர்ந்தான் என்று சொல்கிறது புராணம்.
இப்படி, கேள்விகளைக் கேட்டு வளரும் குழந்தைகளுக்கு தகுந்த விளக்கங்களைப் பெரியவர்கள் தரவேண்டும். ஆனால் பெரியவர்கள் சிலருக்கு அதற்கான பொறுமை இருப்பதில்லை. எனவே குழந்தைகள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் இடத்தைத் தேடிப்போய், கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடுகின்றனர்.
தப்பு செய்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் _ என்று சொன்னால் மட்டும், குழந்தைகள் திருப்தியடைந்து போவதில்லை. அதற்கு உம்மாச்சியைப் பற்றிய கதையும் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்குச் சொல்வதற்கான தெய்வீகக் கதைகள் நிறைய இருக்கின்றன. குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது, இயல்பாகத் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன, எதற்காகக் கோயிலில் விக்கிரகங்கள் இருக்கின்றன, அது என்ன மாடு மாதிரி சிலை, அதை ஏன் இங்கே வைத்திருக்கிறார்கள்....


உங்கள் கருத்துக்களை பகிர :