ஹிஸ்புல்லா

ஆசிரியர்: பா ராகவன்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 152
₹100 $4.5    You Save ₹2
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'ஜூலை 2006 தொடங்கி ஒரு மாத காலம் நீடித்த இஸ்ரேல் - லெபனான் யுத்தத்தின் கதாநாயகனாக நமக்கு அறிமுகமான இயக்கம், ஹிஸ்புல்லா. கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லியமாகத் திட்டமிட்டு குண்டு வீசுவார்கள், நொடிப்பொழுதில் தற்கொலைப் படையாக மாறி வெடித்துச் சிதறுவார்கள். பீரங்கிகளையும் நவீன துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு நேரடி யுத்தமும் செய்வார்கள். ஒரு தீவிரவாத இயக்கமாக அமெரிக்க, இஸ்ரேலிய ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இன்னொரு முகம் உண்டு. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் இயக்கமும் கூட. இரண்டு கேபினட் அமைச்சர்கள் உள்பட, நாடாளுமன்றத்தில் பதினான்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் மிக முக்கியமான அமைப்பு. பி.எல்.ஓ., ஹமாஸ் உள்பட பெரும்பாலான போராளி இயக்கங்கள் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்துவிட்ட நிலையில், விடாப்பிடியாக 'இஸ்ரேலை ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம்' என்று இன்றுவரை மூர்க்கமாக நிற்கிற விஷயத்தில்தான் ஹிஸ்புல்லா மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது. சித்தாந்த பலம், அதிர வைக்கும் ஆள்பலம், பணபலம், வலுவான சர்வதேச நெட்வொர்க் என்று வளர்ந்து நிற்கும் ஹிஸ்புல்லாவை, அல் காயிதாவுக்கு நிகரானதொரு இயக்கமாகக் கருதுகிறது அமெரிக்கா.

உங்கள் கருத்துக்களை பகிர :