மொழியும் நிலமும்

ஆசிரியர்: ஜமாலன்

Category
Publication கருத்து - பட்டறை வெளியீடு
FormatPaperback
Pages 248
First EditionOct 2003
2nd EditionJul 2017
₹210 $9    You Save ₹21
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மொழியின் பிறப்பையும் சமூகத்தில் அதன் பங்கையும் ஆராய்வது என்பது அற்புதமும், சாகசமும் நிறைந்த பயணம், முப்பது நாற்பதுகளில் வோலோசினோவ் போன்றவர்களுக்குக்குப் பிறகு மொழியியலுக்குச்
சற்று கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது பின்நவீனத்துவவாதிகளால் இந்தப் போக்கின் தாக்கமாகவே இங்கு, மொழி வழியாக ஒரு சமூகம்
எப்படி கட்டமைக்கப்படுகின்றது என்கிற ஜமாலனின் மாறுபட்ட விமர்சன முறையைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இத்தொகுப்பு.

நண்பர் ஜமாலனின் இக்கட்டுரைத் தொகுப்பு சற்று தாமதமாக வந்துள்ளது. இருப்பினும் வந்துவிட்டது என்கிற மகிழ்ச்சி உண்டு. தமிழில் விமர்சனம் என்கிற தளத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட விமர்சன அணுகுமுறையைக் கொண்ட இவர் மார்க்சிய மற்றும் பின்நவீனத்துவ அணுகுமுறையைக் கலந்து எழுதியிருப்பது தனித்துவம் கொண்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டதாக உள்ளது. அற்புதமான Materialistic Outlook உடன் கூடிய ஒரு புதிய விமர்சன முறையை அறிமுகப்படுத்துவதாகவும் உள்ளது. - குறிப்பாக புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் கதை குறித்த விமர்சனம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. படைப்புகளின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடுவதல்ல விமர்சனம், படைப்பாளனின் உலகத்திற்குள் பயணிப்பதும் ஓர் ஆச்சரியமான அனுபவம் என்பதை காட்டியிருக்கிறார். மார்க்சிய விமர்சன முறை வந்த பிறகே தமிழ் விமர்சன உலகில் புதிய வீச்சு ஏற்பட்டது என்பதை நாம் இங்கு சொல்லியாக வேண்டும். இந்த அணுகுமுறையையே மொழியும் நிலமும் என்கிற தொல்காப்பியம் பற்றிய கட்டுரையிலும் பயன்படுத்தியிருப்பது நாம் அவதானிக்க வேண்டிய ஒன்று. - தமிழ் படைப்புலகமும், விமர்சன உலகமும் சரியான சமுதாய நோக்கு நிலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாததற்கு படைப்பாளியும் விமர்சகனும் தனது வர்க்கச் சார்பு நிலையிலிருந்து வெளி வராததையே காட்டுகிறது. இது ஏன்? மொழி ஏன் இன்னும் மனிதனைச் சமுதாயப்படுத்த முடியவில்லை ? அல்லது பிரிந்து கிடக்கும் மனிதர்களை சமுதாயத்தின் பொது மொழிக்குள் கொண்டு வர முடியவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :