மீண்டும் எழுவோம்

ஆசிரியர்: அ.ஆண்டோ சகாயராஜ்,ச.ச

Category
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 149
First EditionJan 2018
ISBN978-81-88038-98-5
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹160 $7    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சமூக ஆர்வத்தோடு அரசியல், அறவழி, இயற்கை , இலவசம், கடவுள், காதல்... என்ற 25. தலைப்புகளில், எளிய வார்த்தைகளில், ஆழமான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை அனுபவங்கள் மூலம் 'விழுந்தாலும் எழுந்து நட தோழா!' என்று ஆக்கப்பூர்வமான அழைப்பை உரக்கச் சொல்லி உற்சாகமூட்டுகிறார் ஆண்டோ சகாயராஜ்.
-அருட்பணி கே, எம், ஜோஸ் ச.ச, சென்னை சலேசிய மாநிலத் தலைவர்
இளைஞர்களை நல்வழிக் கொணர இன்றும் பேனா முனை ஆற்றல் வாய்ந்தது. எழுத்து ஊடகம் ஏற்றமிகு வாடகம். இளம் எழுத்தாளர், ஆண்டோ சகாய ராஜ் இளைஞர்கள் உயர் வாழ்வுக்காகவே தம்மை அர்ப்பணித்தவர். அவரது பேனா முனை படைத்த கட்டுரைகள் அனைத்தும் இளைஞர் முன்னேற்றத்தில் தெளிவு பெற்று நகர்கின்றன. இளம் எழுத்தாளர் ஆண்டோ , “மீண்டும் எழுவோம்” என்ற கட்டுரைத் தொகுப்பை இளைஞர்களுக்குப் படைத்துள்ளார். உன்னை நீ அறிவாய், அர்த்தமிகு எழுச்சி, உன்னால் முடியும்... என்று இளைஞர்கள் உலகைத் தட்டி எழுப்புகிறார்.
- அருட்பணி பெல்லார்மின், ச.ச.
தொன் போஸ்கோ இறையியலகத் தந்தை, குருதி பூசிய கத்தியை நக்கி நாக்கறுபட்டுச் சாகும் ஓநாய்கள் போல் இலவசங்களை நக்கி நலிவுற்றுக் கிடக்கும் மக்களுக்காக இரங்குகிறார். 'முதிர்ச்சியுள்ளோரின் காதல் முனை மழுங்குவதில்லை,' 'வாழ்க்கையில் வெறியோடு போராடுபவர்களே வரலாறு படைக்கிறார்கள்.” * எந்தவழி ஏற்றம் தரும் வழி,' 'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்...' போன்ற நல்ல பல செய்திகளால் வீழ்ந்து கிடக்கும் இளைஞர்களை மீண்டும் எழுந்து நிற்க அறைகூவல் விடுக்கும் இந்நூல் படிக்க வேண்டிய நன்னூல் என்பதில் ஐயமில்லை. அருட்பணி ஆ. சிலுவை முத்து, ச.ச.
பதிப்பாசிரியர். சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சார்ந்த ஆண்டோ சகாயராஜ். தொன் போஸ்கோவின் சலேசியச் சபையில் ஓர் இளம் துறவி. பேச்சு, இசை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபாடு மிக்க இவர், 'அரும்பு, சலேசியன் செய்தி மலர், பரிசல்' எனும் மாத இதழ்களில் இளையோருக்கு ஊக்கம் தரும் கதை, கட்டுரைகளை எழுதி வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :