மாங்கனி

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 116
First EditionApr 2011
3rd EditionFeb 2016
ISBN978-81-8402-646-7
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லக்குடி வழக்கிலே தண்டிக்கப்பட்ட நானும் நண்பர்களும் திருச்சி மத்தியச் சிறையிலே வைக்கப்பட்டிருந்தோம். அப்போது அங்கே உருவானதுதான் இந்தக் காவியம். காவியம் எழுத வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாகவே எனக்கு உண்டு, மிகவும் அமைதியான சூழ்நிலை இருந்தாலொழிய ஓரளவுக்காவது சுவை பயக்கும் காவியத்தைப் புனைய முடியாது என்பதும் என் நம்பிக்கை. ஆகவே என் ஆசை ஆசையாகவே இருந்தது; நிறைவேற வழியில்லை, சிறைச்சாலை அந்த வாய்ப்பை எனக்குத் தந்தது. சிறையிலே எழுதியதற்கு மேல் அதிகம் ஒன்றும் சேர்க்காமலேயே இதனை வெளியிடச் செய்திருக்கிறேன். இலக்கண வரம்பை உணர்ச்சி தாண்டியபோது நான் குறுக்கே நிற்கவில்லை. ஆகவே இந்தக் காவியத்தில் காணப்படும் "சட்டத்தை மீறிய குற்ற"ங்கள், வேகமாக ஓடிய என் உணர்ச்சியின் விளைவுகளே. காயமுனையும் புலவர்கள் மன்னிக்க; நிற்க.

உங்கள் கருத்துக்களை பகிர :