மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 87
First EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 24 x (W) 16 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

குழந்தைகளின் அறியாமையும், வெகுளித்தனமும் நம்மை பித்துக்கொள்ளச் செய்யும் அளவுக்கு தூய்மையானவைதான். ஆனால் தெய்வீகமான அந்த அறியாமையை கலைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இன்றைய பெற்றோர்கள் இருக்கிறோம். வேறெப்போதை விடவும் இன்று நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பரவிக் கிடக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு அவர்களின் உடலைப் பற்றியும், அவர்களது உரிமைகளைப் பற்றியும் சொல்லித் தருவது நம் கடமையாகிறது. குழந்தைகளுக்கு தன் உடல் தன் உரிமை எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதும், அவர்களிடம் யாரேனும் அத்துமீற முயற்சித்தால் மறுப்பை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க கற்றுத் தருவதும், அத்துமீறுபவர்களைப் பற்றி பெற்றோரிடம் வெளிப்படையாக பேசும் தைரியத்தை அவர்களுக்கு அளிப்பதுமே அவர்களை காக்கும் வழியாகும். இப்புனைவின் வழி அதற்கான முதலடியை எடுத்துக் கொடுத்துள்ளார் பாலபாரதி.

உங்கள் கருத்துக்களை பகிர :