மனம் சுடும் தோட்டாக்கள்

ஆசிரியர்: கவிஞர் மு . கீதா

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperpack
Pages 76
First EditionAug 2017
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹2
(2% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

என் அன்புச் சகோதரி கவிஞர் மு.கீதாவின் முத்தான நான்காவது கவிதைத் தொகுப்பு "மனம் சுடும் தோட்டாக்கள்". என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பும், கீதாவின் இரண்டாம் கவிதைத் தொகுப்பும் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. அதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும், இதோ இப்பொழுது அவருடைய மூன்றாவது தொகுப்பிற்கு முன்னுரை எழுதுகிறேன், அளவில்லா உவகையுடன். கீதாவின் கவிதைகள் சமூக அவலங்களைக் கண்டு எரிமலையாய்க் குமுறும், இயற்கை அழிவில் பரிதவிக்கும், அன்பில் பனியாய் உருகும், நட்பில் நலமே விழையும். மொத்தத்தில் அன்பான நல்ல ஒரு மனிதியின் சிந்தனைத் தோட்டாக்கள் அவை, சமூகத்திடம் பெண்கள் கேட்க வேண்டிய கேள்விகள் கேள்விகளால் துளைக்கவா நானும்...?" என்று சவால் விடுகின்றன. இவற்றிற்குப் பதில் கிடைக்குமா என்பதே என் ஆதங்கமும்… சமூகச் சிந்தனை கொண்ட கீதாவின் கவிதைகள் தோட்டாக்களாய் மனதைச் சுடுகின்றன. இவை உயிர் எடுக்கும் தோட்டாக்கள் அல்ல, உயிர் கொடுக்கும் தோட்டாக்கள், சுட வேண்டிய இடங்களில் எல்லாம் நன்றாகச் சுடட்டும், நன்மை பெருக்கட்டும். கீதாவிற்கு என் உளம் நிறைந்த அன்பின் வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :