மதிப்புக் கூட்டும் மந்திரம்

ஆசிரியர்: க.அழகுசுந்தரம்

Category விவசாயம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 80
First EditionApr 2014
2nd EditionJul 2015
ISBN978-81-8476-584-7
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹75 $3.25    You Save ₹1
(2% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அறுவடை செய்யப்பட்ட பிறகுகூட, காய்கறிகள் பழங்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. மனிதர்களைப்போலவே சுவாசிக்கின்றன. ஆனால், சுற்றுச் சூழலின் அதிக வெப்பத்தால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதி விரைவு சுவாசம் ஏற்பட்டு, மிக சீக்கிரமாகவே முதிர்ச்சி அடைந்து சேதமடைகின்றன. காற்றின் ஈரப் பதம் குறையும்போது அதாவது வெயில் நேரங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவை தன் ஈரப்பதத்தை அதிக அளவில் இழந்து வாடி விடு கின்றன. ஒவ்வொரு 10 °C அளவுக்கு வெப்பம் குறைக்கப்படும்போதும், இவற்றின் பாதுகாப்புத் திறன் இரு மடங்கு உயர்கிறது. குளிர்பதனக் கிடங்குகளின் மூலமாக ஒரு காய்கறிக்கோ அல்லது பழத்துக்கோ அதன் தன்மைக்கேற்றவாறு, தேவையான வெப்ப நிலையையும், ஈரப்பதத்தையும் உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஒவ்வொரு காய்க்கும், பிரத்யேகமான மணம் இருப்பதால் ஒரே இடத்தில் பல வகையான காய்கறி, பழங்களை வைத்தால், ஒன்றின் மணம் மற்றொன்றில் கலந்து தரத்தைக் குறைத்துவிடும். தற்போது தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் 'ஆலம்' ' என்கிற வேதிப்பொருளுக்கு மாற்றாக, முருங்கை விதைத் தூளைப் பயன்படுத்தலாம்.அறுவடை செய்யப்பட்ட வாழையில் எத்திலீன் வாயு தொடர்ச்சியாக உற்பத்தியாவதால் அதை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. 10 நாட்கள் வரை மட்டுமே இருப்பு வைக்க முடிகிறது. ஆகவே, வாழை, பணப் பயிராக மாற்றப்பட வேண்டும். அதாவது, வாழையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது உணவுப் பொருட்களில் மா விதை பவுடர் மற்றும் எண்ணெயை மிக முக்கியப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் மனித உடலுக்குத் தேவையான ஒலியிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் காணப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :