பிரதாப முதலியார் சரித்திரம்

ஆசிரியர்: மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளை

Category நாவல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 171
First EditionAug 2009
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வேதநாயகம் பிள்ளை 1826-ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்த குளத்தூரில், சைவ சமயத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறின குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவருக்கு இளமை முதற்கொண்டே ஆழ்ந்த தெய்வ பக்தியும், தமிழிலும் இசையிலும் பற்றும் ஏற்பட்டிருந்தன. இவர் மாயூரம், சீர்காழி, தரங்கம்பாடி முதலிய இடங்களில் முன்சீப்பாக வேலை பார்த்தார். இவருடைய தீர்ப்புகள் நீதி தவறாத தன்மைக்குப் பெயர் பெற்றவை. முன்சீப்பு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இவர் மாயூரம் முனிசிபல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொது வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டுகள் செய்து வந்தார். பெண் கல்விக்காகவும், முதியோர் கல்விக்காகவும் இவர் மிகுந்த சேவை செய்தார். இவர் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவராயினும் இவரது பரந்த சமரச மனப்பான்மையும், ஆழ்ந்த அன்பும் எல்லா மதத்தாருடைய நட்பையும் அவருக்கு அளித்தன. இவர் இயற்றிய நூல்களில் இந்த சமரச நோக்கு பெரிதும் காணக் கிடக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :