பாரதிராஜா போலி மீட்பர்

ஆசிரியர்: பி.ஆர். மகாதேவன்

Category சினிமா, இசை
Publication நிழல்
FormatPaperback
Pages 112
First EditionDec 2011
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹2
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


உலகிலேயே அதிகப் படங்கள் தயாரிக்கப்படும் நாடு இந்தியா... அதிலும் தமிழகத்தில் உருவாக்கப்படும் படங்களின் எண்ணிக்கை கணிசமானது. ஆனால், தரத்தின் அடிப்படையில் உலக அரங்கில் தமிழ் படங்களின் இடம் என்ன? இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டடக்கலை என பாரம்பரியக் கலைகளில் உச்சத்தை எட்டியிருக்கும் தமிழ் சமூகம் நவீன கலைவடிவமான திரைப்படத்துறையில் என்ன இடத்தைப் பெற்றிருக்கிறது... என்ன இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்... எது அதற்குத் தடையாக இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் அலசுகிறது. உலகச் சந்தை என்பது பரந்து விரிந்துகிடக்க, தமிழ் இந்தியப் பார்வையாளர்களின் சந்தையோடு முடங்குவதில் திருப்தியடைபவர்களாகவே தமிழ் திரைப்பட உலகத்தினர் இருக்கிறார்களே அது ஏன் என்ற கேள்வியை இந்தப் புத்தகம் எழுப்புகிறது. சில இலக்கியவாதிகளிடம் எப்படிக் கதை எழுத வேண்டும் என்பதையும் பல இயக்குநர்களிடம் எப்படிப் படம் எடுக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர், ஓர் எழுத்தாளரின் பார்வையில் சில தமிழ் திரைப்படங்களின் திரைக்கதைகள் குறித்து எழுதியிருக்கும் ஆக்கபூர்வமான விமர்சனமே இந்தப் புத்தகம். எடுத்துக்கொண்டிருக்கும் படங்களின் திரைக்கதையில் இருக்கும் குறைகளைப் பட்டியலிட்டதோடு நிறுத்தாமல் மாற்றுத் திரைக்கதைக் குறிப்பையும் ஆசிரியர் விரிவாக முன்வைத்திருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் உலக அரங்கில் மேலான இடத்தைப் பெற வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :