பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்

ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 209
First EditionMar 2009
2nd EditionJul 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹130 $5.75    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர்; தனித் தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு அவர்கள்.
நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை . நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர்+அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதல் முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந்துள்ளனர். அதனால் நகரப் பெயரினின்னு நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக் காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க, நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிக முள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக, ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே .

உங்கள் கருத்துக்களை பகிர :