நீங்களும் ஒரு நாள்

ஆசிரியர்: அ.ஆண்டோ சகாயராஜ்,ச.ச

Category
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 198
First EditionMar 2017
ISBN81-88038-90-3
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹175 $7.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நீங்களும், சாதாரண மனிதர்கள் ஒருநாள்.. சாதாரண மனிதர்கள் சாதனை மனிதர்களாக!
சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சார்ந்த ஆண் டோ சகாயராஜ், தொன் போஸ்கோவின் சலேசிய சபையில் ஓர் இளம் துறவி. பொருளியலிலும், தத்துவயியலிலும் இளங்கலைப் பட்டங்களைப் பெற்று, கவரப்பேட்டை 'பெக்கி' தொன் போஸ்கோ கல்லூரியில் இறையியல் படித்துக்கொண்டிருக்கிறார். பேச்சு, இசை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபாடு மிக்க இவர், 'அரும்பு, சலேசியன் செய்தி மலர், பரிசல்' எனும் மாத இதழ்களில் இளையோருக்கு ஊக்கம் தரும் கதை, கட்டுரைகளை எழுதி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து சிந்திக்க வைக்கும் சில உண்மைகளைத் தொகுத்து, தமது கருத்துகளையும் அவற்றுடன் இணைத்து மெருகூட்டி, வாழ்னை மணங்கமழச் செய்யும் 33 மலர் மொட்டுகளைச் சாரமாக இந்நூலில் தொடுத்திருக்கின்றார். சந்தித்த நிகழ்வுகளை, உணர்ந்த உண்மைகளை எளிய நடையில் எடுத்துரைப்பதில் திறன்மிக்க இவரின், 'நீங்களும் ஒருநாள்' என்னும் முதற்படைப்பு, பலரின் வாழ்விலும் ஒருநாள் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை . 'நீங்களும் ஒருநாள்' என்னும் இந்நூல் உங்களைச் சாதனை மனிதர்களாக்கும் என நம்புகின்றோம். "வெற்றிக்கு வழியே இல்லையா?" என, வாழ்வில் மனமுடைந்த வேளையில், எடுத்துப் படியுங்கள் 'நீங்களும் ஒருநாளி' வெற்றிக் கனியைச் சுவைப்பீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :