நாட்டுப்புறக் கலைகள்

ஆசிரியர்: அரு.ராமநாதன்

Category நாட்டுப்புறவியல்
Publication மணிவாசகர் பதிப்பகம்
FormatPaperback
Pages 400
First EditionDec 2001
Weight400 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 2 cms
₹190 $8.25    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

முனைவர் ஆறு. இராமநாதன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் 3.8.1950இல் பிறந்தவர். பெற்றோர்: பொ. ஆறுமுகம் - சீதாலட்சுமி. இவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் அண்ணாமலைப் பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ந்து, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டம் பெற்றவர்.நாட்டுப்புறவியல் துறையில் உலக அறிஞர்களிடம் பயிற்சி பெற்று, அவர்களால் பாராட்டப் பெற்றவர். செயலரங்குகள் நடத்திப் பயிற்சியளித்தவர். கருத்தரங்குகள் பல நடத்தியவர். தேசிய அளவில் பல கருத்தரங்குகளில் கட்டுரை படித்துள்ளார். பனிரெண்டுக்கும் மேற்பட்ட தரமான நாட்டுப்புறவியல் நூல்களை வெளியிட்டவர். 60க்கு மேற்பட்ட கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வட்டார சர்வதேச இதழ்களில் வெளியிட்டவர். நாட்டுப்புறப் பாடல் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியர்.சிறந்த படைப்பாளியாகவும் விளங்கும் இவரின் முதல் நூல் குமுறல் சிறுகதைத் தொகுப்பே. கதைகள், கவிதைகள், நாடகங்கள் (வானொலி நாடகங்கள் உட்பட) பல்வேறு இதழ்களில் வெளியிட்டவர்.கிருட்டினகிரி அரசு கலைக்கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழக சமூகவியல் துறை - இவர் பணிபுரிந்த இடங்கள். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகச் செயலராகவும் உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :