தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்

ஆசிரியர்: முனைவர் க.நெடுஞ்செழியன்

Category இலக்கியம்
Publication பாலம்
FormatPapaerback
Pages 160
First EditionJan 2010
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80 $3.5    You Save ₹1
(2% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

முன்னுரை 'தொல்காப்பியரின் காலம் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்; அதுபற்றி நீங்கள் ஒரு கட்டுரை தாருங்கள்; உங்கள் கட்டுரை விவாதத்தின் மையப்பொருளாய் இருக்கும், பேராசிரியர்; தமிழண்ணல் தலைமை தாங்குவார்; கருத்தரங்கம் காரைக்குடி கோவிலூர் மடத்தில் நடக்கும்; தவறாமல் பங்கு பெறுங்கள் இது என் வேண்டுகோள்', எனப் பேராசிரியர் ஆறு அழகப்பன் அவர்கள் தொலைபேசி வழியாகக் கூறினார். பின்னர் கடிதங்களும் வந்தன.
1978 இல் 'மயங்காமரபு' எனும் தலைப்பில் எழுதி, 'இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்' எனும் எம் நூலிலும் இடம் பெற்றிருந்த அக்கட்டுரையை அப்போதுதான் கொஞ்சம் விரிவுபடுத்தி நூலின் இரண்டாம் பதிப்பிலும் சேர்த்திருந்தேன். அக்கட்டுரையைப் படித்த செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவன இயக்குநர் முனைவர் க. இராமசாமி அவர்களும், மேலும் சில செய்திகளைக் கூறி கட்டுரையை விரிவு செய்யுங்கள் என்றார். அப்படி விரிவுபெற்று அமைந்ததே முதல் கட்டுரை. -
(சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்போது போல) எந்தவித ஆய்வுச் சூழலும் முழுமை பெற்றிராத நிலையில் திருக்குறளின் காலத்தை அறிஞர்கள் வரையறை செய்தனர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட அறிஞர்கட்கு ஒரு நோக்கம் இருந்தது. தமிழை - தமிழ் மரபுகளைத் தாக்கியும், தமிழ் இலக்கியங்களின் காலத்தைப் பின்தள்ளியும், சிறுமைப்படுத்திய கொடுமையை மாற்றுதல் எனும் உயர்ந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தது. அதனால் திருக்குறளின் காலத்தை கி.மு. முதல் நூற்றாண்டிற்குக் கொண்டு சென்றனர். ஆனால் அப்படிப்பட்ட எந்த அடிப்படையும் நோக்கமும் இல்லாமல் தங்கள் வாழ்நாளில் தொல்காப்பியர் காலத்தை வரையறை செய்து விடவேண்டும் என்ற பேராவலில் இக்காலப் பெரும் பேராசிரியர்கள் தவியாய்த் தவிக்கின்றனர். அதன் விளைவாகத் தொல்காப்பியர் காலம் கி.மு. 711 என்று முடிவு செய்தனர். அம்முடிவிற்குச் சான்றும் காட்டவில்லை.


உங்கள் கருத்துக்களை பகிர :