தெரியுமா?

ஆசிரியர்: பொ.ஐங்கரநேசன்

Category அறிவியல்
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 242
First EditionJan 2007
ISBN81-88038-73-3
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"தொடர்ந்து நிகழும் அறிவியல் நிகழ்வுகளைத் தமிழில் சொல்வதற்கான அவசியம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த மிக அவசியமான, மிகப் பெரிய தேவையை பொ. ஐங்கரநேசன் அவர்களின் 'தெரியுமா?' நிறைவு செய்கிறது. கேள்வி - பதில் வடிவில் அமைந்த இந்நூலின் வரவு, அறிவியல் தமிழில் ஒரு முக்கியமான மைல்கல். அறிவியலின் அடிப்படை தொடங்கி, அண்மைக் கண்டுபிடிப்புகள் வரை ஏராளமானவற்றைப் பற்றிப் பதிவு செய்திருக்கும் இந்நூல், ஒரு கலைக் களஞ்சியமாக விளங்குகிறது.” பேராசிரியர் முனைவர் து. நரசிம்மன் தமிழின் குறிப்பிடத்தக்க அறிவியல் எழுத்தாளரான பொ. ஐங்கரநேசன், ஒரு சிறந்த பத்திரிகையாளர். அறிவியல் கட்டுரைகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல், பண்பாடு, அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் போன்றவற்றில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். இவரது நேர்காணல்களின் தொகுப்பு, 'வேர்முகங்கள்' என்ற பெயரில் அண்மையில் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணத்தைத் தாயகமாகக் கொண்ட பொ. ஐங்கரநேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுஅறிவியல் படிப்பை முடித்தவர். சென்னைக் கிறிஸ்துவ கல்லூரியில் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பு பயின்றவர். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் பதிப்பகம் எழுதி வரும் இவர், ஒரு சுற்றுச்சூழலியலாளரும் கூட.

உங்கள் கருத்துக்களை பகிர :