தூப்புக்காரி

ஆசிரியர்: மலர்வதி

Category நாவல்கள்
Publication மதி வெளியீடு
FormatPaperback
Pages 135
First EditionJan 2012
6th EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120 $5.25    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டு துண்டான பீயையும், திட்டுத் திட்டான தூமை இரத்தத்தையும் 'தூப்புக்காரி' நாவலில் பதிவுச் செய்திருக்கிறார் மலர்வதி. சமூக குண்டியைக் கழுவி குளிப்பாட்டி, பவுடருக்குப் பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி ஒப்பனை பண்ணும் சமூகத் தாய்மாரை இந்த நன்றிகெட்ட சமூகம் நாயிலும், பன்றியிலும் கீழாக நடத்தும் அவலத்தைச் சித்தரிப்பதே மலர்வதியின் 'தூப்புக்காரி', மலர்வதியின் கலையழகு மொழியில், வாசகரின் புலன்களை ஊசியால் குத்துகின்ற அவருடைய சித்தரிப்பில், கவிதையா.., உரைநடையா.... என மயங்க வைக்கும் சொல்வளத்தில், வட்டார வழக்குகளை லாவகமாகக் கையாளும் நேர்த்தியில் வெளிப்படுகிறது. தமிழ் நாவல் உலகைத் தன்னை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறார் மலர்வதி. ஏற்கனவே ஒரு நாவல் எழுதிய மலர்வதி இளம் படைப்பாளி. வலுவான ஒரு நாவலாசிரியராக வளர்ந்து முழுமைபெறத்தகு ஆற்றல் உள்ள மலர்வதியின் வாசிப்பு, தொடர் உழைப்பால் அவருக்குரிய இடத்தில் உயர்த்தி அமர்த்தும். என் மனமார்ந்த பாராட்டுதல்கள். நாவலாசிரியர் பொன்னீலன், சாகித்ய அகாதமி விருது பெற்றவர், மணிக்கட்டிப் பொட்டல், குமரி மாவட்டம். வைகுண்டர், ஜீவா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அமரர் சுந்தர ராமசாமி, முற்போக்கு முகாமின் முகமாக புன்னகைக்கிற - பொன்னீலன் ஆகியோர் உதயமான குமரி மாவட்டம் மலர்வதி என்றோர் இளம் படைப்பாளியையும் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. - மக்கள் மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதற்கு அடையாளமாக தலைப்பே திகழ்கிறது. நாவல் வாசித்து முடிக்கிற தருணத்தில் படைப்பு குறித்தும் படைப்பாளியைக் குறித்தும் மிகப்பெரிய மலைப்புக்கு ஆளானேன். துப்புரவுத் தொழிலாளர் அனுபவங்களும், கழிப்பறை சுத்தம் செய்கிற அனுபவங்களும், நெஞ்சுக்குள் ஒரு மிகுந்த உணர்வதிர்களுடன் பரவிற்று. தகழியின் 'தோட்டிமகன்' நாவலை வாசித்துக் கொண்டிருப்பதாக ஒரு பிரமைத் தட்டியது. கதைப் பயணம் செய்கிற களங்களும், மொழி பிரயோகிப்புகளும் நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. விளிம்பு நிலை மாந்தர்களின் தொழில் சார்ந்த சரிவுகள் மிகுந்த யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 'தூப்புக்காரி' வாசகர் மனதை கசக்கிப் பிழிந்து சலவை செய்கிறாள். மலர்வதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும், தமிழ் இந்த நாவலை தனக்கான ஆபரணமாக அணிந்துக் கொள்ளும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நாவலாசிரியர், மேலாண்மை பொன்னுசாமி, சாகித்ய அகாதமி விருது பெற்றவர்,

உங்கள் கருத்துக்களை பகிர :