தமிழ் இனமும் பாஸ்க் இனமும்

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
First EditionJan 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150 $6.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

எபிறேயத்தின் தாய்மொழி தமிழே என்ற எனது நூலில், பாஸ்க் இன மக்கள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். எபிறேயம் என்ற மொழிபற்றிய சிந்தனை தமிழர்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்நூல் வெளியான பிறகு, அம்மொழிபற்றிய தெளிவு ஓரளவுக்கு வெளிப்பட்டது. அந்நூலில் குறிப்பிடப்பட்டிருந்த பாஸ்க் இனம் பற்றி பலர் என்னிடம் மடல்கள் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் விளக்கம் கேட்ட வண்ணம் இருந்தனர். குறிப்பாக ஈழத்தமி நரில் சென்னையில் வாழ்ந்துவரும் சிலர் நேரிடையாக என்னைச் சந்தித்து விளக்கம் கேட்டனர், பாஸ்க் இனத்தார், பற்றிய நூலொன்றை எழுதுமாறும் கேட்டுக் கொண்டனர். 1 அதற்கான காரணம் ஒன்றும் அவர்களிடத்தில் இருந்தது.தமிழர்கள் தங்களுக்கென தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் வேளையில், அதே கோரிக்கையை முன்வைத்து தங்களுக்கும் தனிநாடு வேண்டும் எனப் போராடிவரும் பாஸ்க் இன மக்கள் பற்றிய போரட்டத்தை அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த 200 ஆண்டுகளாக, ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாட்டு அரசுகளை எதிர்த்துப் போராடி வருகின்ற செய்தியையும் அறிந்திருக்கின்றனர். பாஸ்க் மக்களின் தனிநாடு குறித்த போராட்டத்தை இரு நாட்டு அரசுகளும் நசுக்கி வருகின்றன. ஸ்பெயின் பிரான்சு ஆகிய இருநாடுகளின் எல்லைப் பகுதி களில், மறைந்திருந்து தாக்கும் (கொரில்லா) போர் முறையை பாஸ்க் இனக்குழுக்கள் கையாண்டு வருகின்றன. இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இரு பெரும் வல்லரசுகளை எதிர்த்து அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றும் வருகின்ற
பாஸ்க் இன மக்கள் பற்றியும், அவர்தம் யூஸ்கரா (Euskara) என்ற மொழியைப்பற்றியும் கடந்த 300 ஆண்டுகளாக ஆய்வாளார்கள் பலரும் சிந்தித்துள்ளனர். அவர்களில் பலரும் தத்தமக்குத் தெரிந்த மொழிகளாடு பாஸ்க் மொழி தொடர்பு பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்துள்ளனர். அவர்களுடைய கருதுகோள்கள் பலவாக இருந்தபோதிலும் ஒவ்வொரு வருடைய கருதுகோளிலும் சிறிதளவேனும் உண்மையிருந் துள்ளதைக் காணமுடிகின்றனது. இது மொழிகளிடையே காணப்படும் ஒற்றுமைக் கூறுகளின் தன்மைகளை நூற்றுக்கு இவ்வள்வு பங்கு எனக் கணக்கிட்டுள்ளனர். அக்கணக்கில் சில கூடுதலாகவும், சில குறைவாகவும் காணப்பட்டனவேயன்றி முற்றிலுமாகத் தொடர்பற்றுப் போய் விடவில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :