தமிழர் வரலாறு

ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHardbound
Pages 416
First EditionAug 2011
2nd EditionOct 2018
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹260 $11.25    You Save ₹2
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம்மாநிலம், 'பூமி' என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று. தென் சொல்லெனினும் தமிழ்ச் சொல் லெனினும் ஒக்கும்.
ஞாலநிலப்பாகம் இன்றுள்ள வாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்று தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்ட வனம் (Gondwana), அங்காரம் (Angarh), (பாலதிக்கம் Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு ) நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுந்திருந்தது. காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலி யாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும் பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென் பகுதியையும், அம்சோனியம் தென்னமெரிக்காவையும், தம்முட் கொண்டிருந்தன. அரபிக்கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை. இந்துமாவாரியின் பெரும்பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதிமா வாரியொடு சேர்ந்திருந்தது. அதனால், பனிமலைத் தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது.'
இந்திய வரலாறு வரைவோர் அனைவரும் வடக்கிலிருந்து தொடங்கி, வட இந்திய வரலாற்றை விரிவாக எழுதி, தென்னிந்திய வரலாற்றை மிகச் சுருக்கியோ அல்லது முழுதும் புறக்கணித்தோ எழுதி முடித்துவிடுவர். இதனை உணர்த்தவே வரலாற்றுப் பேரறிஞர் ஒருவர் இந்திய வரலாற்றைத் தென் முனையிலிருந்து தொடங்க வேண்டுமென்று துணிந்து குறிப்பிட்டார். வானளாவிய அளவில் இன்று உயர்ந்து நிற்கும் இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தமிழகம் குமரிக்குத் தெற்கே ஈராயிரம் கல் அளவு பரந்து விரிந்து கிடந்தது என்றும் குமரிக் கண்டம் என்று வழங்கப்பெற்றது என்றும் புவியியல் அறிஞர் கூறுவர். இருப்பினும் வடவரின் வல்லாண்மை காரணமாக என்றும் வடநாட்டு வரலாறே இந்திய வரலாறு என்று கருதப்படுகின்ற அளவிற்குச் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் வரலாறு ஏனையோரால் சிதைந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் திருத்தி உண்மை வரலாறு எழுதவேண்டிய இன்றியமையாச் சூழல் தோன்றியபோது மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் இந்நூலினைப் படைத்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :