தமிழரின் தொன்மை

ஆசிரியர்: குணா

Category வரலாறு
Publication தமிழர் களம்
FormatHardbound
Pages 504
First EditionSep 2016
Weight850 grams
Dimensions (H) 23 x (W) 16 x (D) 4 cms
₹500 $21.5    You Save ₹15
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மண்ணையும் கொடியையும் கொற்றத்தையும் இழந்த தமிழ்ப் பேரினம், திராவிட இனம் எனும் பொய்ப்பெயரில் புதைக்கப்பட்டுக் கிடக்கிறது. அது தன் தலையறுத்து தன் அடையாளத்தையும் இறைமையையும் மீட்டெடுக்க உதவும் ஆற்றல், வரலாறு எனும் அடிப்படை அறிவியலுக்கு உண்டு. மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் திருடப்பட்டும் சிறுமைபடுத்தப்பட்டும் கிடக்கும் தமிழரினத்தின் வரலாற்றை மீட்டெடுக்கும் திருப்பணி ஆங்காங்கே தொடங்கியுள்ளதைக் காணக் கண்கள் பூரிக்கின்றன. இஃது ஒரு தொடக்கமேயாகும். செய்ய வேண்டியன உலகளவு. பகை முடிக்கத் தமிழரினம் விரைவில் துயிலெழும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. அதனால் தொய்வின்றி இன மீட்புக்கடனை ஆற்ற வேண்டியது காலத்தின் அறைகூவல்.
தனித்தமிழ் இயக்கத்தின் நூறாவது ஆண்டாகிய 2016ஆம் ஆண் டில் ஒரு சிறப்பு மலரைக் கொணரவிருப்பதால் அதற்கொரு கட்டுரை எழுதிவிடுக்குமாறு முனைவர் ந. அரணமுறுவல் என்னிடம் கேட்டார். 'கட்டுரை என்ன, ஒரு நூலையே எழுதித் தருகிறேன்' என்று நான் அவ ருக்குச் சொன்னேன். தொல்காப்பியத்தின் காலத்தைச் சுட்டும் மிலங் கோவிச் கோட்பாடு எனும் அந்நூலின் ஒரு பகுதியை அவர் திருத்தம் பார்த்தும் தந்தார். இந் நிலையில், அவர் திடீரென மறைவுற்ற செய்தி பேரிடியாய் வந்துற்றது. ஈடு செய்யவியலா இழப்பு! தமிழுக்கும் தமிழ் ருக்குமென ஓய்வு உறக்கம் கெட்டு ஓயாது அலைந்துகொண்டிருந்த அத் தமிழ்ப்பெருமகனை நினைவிலேத்தித் தமிழரின் தொன்மை எனும் இந்த ஆய்வுநூலை அவருக்கே காணிக்கையாக்குகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :