தமிழன் இழந்த மண்

ஆசிரியர்: பழ நெடுமாறன்

Category அரசியல்
Publication தமிழ்க்குலம் பதிப்பாலயம்
FormatPaperback
Pages 100
4th EditionJan 2013
ISBN978-81-9286-65-0
Weight200 grams
Dimensions (H) 25 x (W) 18 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் 1953-ஆம் ஆண்டு வரை தமிழகம் சென்னை மாகாணத்தின் ஒரு அங்கமாக விளங்கிற்று. ஆந்திராவின் பகுதிகள், மலபார் மாவட்டம், தென் கன்னட மாவட்டம் போன்றவை அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன.
ஆனால் 1920-ஆம் ஆண்டில் இருந்தே தனி ஆந்திர மாநிலம் வேண்டுமென தெலுங்கர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர்கள். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக தெலுங்கர்களே தொடர்ந்து இருந்த வந்தபோதி. ஓம் கூட அவர்கள் திருப்தி அடையவில்லை. தங்களுக்கென்று தனியாக ஒரு மாநிலம் அமைந்தால்தான் தங்கள் மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றை வளர்த்து முன்னேற முடியும் எனக் கருதினார்கள். இதற்காக ஆந்திர மகாசபை என்ற ஒரு அமைப்பையும் நிறுவினார்கள். கட்சி வேறுபாடின்றி சகல ஆந்திரர்களும் இதில் அங்கம் வகித்தார்கள், அதைப் போலவே, மலையாளிகள் மூன்று நிலப்பிரிவுகளில் பிரிந்து கிடந்தார்கள். திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் ஆகிய மூன்று பகுதிகளையும் ஒன்றாக இணைந்து ஐக்கிய கேரள மாநிலம் அமைக்க வேண்டும் என்று அவர்களும் குரல் கொடுத்தார்கள். இதற்காக கேரள சமாஜம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி கட்சி வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :