தனிமையின் காதல்காரி

ஆசிரியர்: லுலு தேவ ஜம்லா

Category நாவல்கள்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
Pages N/A
First EditionMay 2019
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆண் இனத்தின் இந்த நரித்தனமான உழைப்புச் சுரண்டலை சரியாய் உணர்ந்து கொள்ளாத பெண் இனமும், சுயசார்பு தன்மையற்ற ஆண்கள் தங்களை தாங்களே கவனித்து கொள்ள முடியாத கையாலாகாதத் தனத்தால் பெண் துணை தேடுவதும், அதை கலாச்சாரம் பண்பாடு என்ற சாயங்கள் பூசி மறைப்பதும்தான் ஒழுக்கமாக பேணப்பட்டு வருகிறது என்பதையும் ஏற்க மறுப்பதுதான் பரிதாபம். அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அதற்கான மாற்று வாழ்க்கைமுறையை செயல்படுத்தும் அளவிற்கு நமக்கு திராணி இல்லை என்பதுதான் இங்க சிக்கலே. ஆக நம் நாட்டில் திருமண வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை என்கிறது மனித இயல்புக்கு மாறான சிக்கலான ஒரு சுழல். இந்த சுழல்ல வாண்ட்டா சிக்கிகிட்டு அதுக்கப்புறம், சமூகத்துக்கு பயந்து, இல்லன்னா குழந்தைகள் நலனுக்காகன்னு சாக்கு சொல்லி அனுசரிச்சு வாழுற இணையர் இருவருமே தங்களுடைய சுயத்தையும் வாழ்க்கையையும் அடுத்தவங்களுக்காக தொலைச்சிட்டு தான் இருக்கிறோம் என்கிறதையும் நாம் உணர்வதே இல்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :