தண்ணீர் தேசம்

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 264
First EditionJun 1996
23rd EditionSep 2016
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200 $8.75    You Save ₹2
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

லெமூரியாவையும் கபாடபுரத்தையும் குடித்த கடலை . விடவும் ஏடுகளைத் தின்ற தீயைவிடவும் தமிழ்மண்ணை அடிமைகொண்ட ஆயுதங்களைவிடவும் ஆபத்து மிகுந்த அபாயம் அது. தொழில்நுட்பம் வளர்த்தெடுத்த தொலைதொடர்பு ஒரு வணிகயுகத்தின் உச்சத்திற்கு வசதி செய்துவிட்டது. ஒரு வர்த்தக மூட்டையாய்ப் போய்விட்ட உலக உருண்டை விஞ்ஞானச் சரட்டால் நெருக்கித் தைக்கப்பட்டுவிட்டது. அதில் பழைய சரக்கு என்பதனால் மட்டுமே எல்லாம் விலையாகிவிட முடியாது; பழுதுபடாத - பயன்பாடுமிக்க சரக்குகளாய் நிலைக்கத்தக்கவை மட்டுமே விலைபோகும். உருட்டித் தைக்கப்பட்ட உலகமூட்டையில் இன்று தமிழும் ஒரு சரக்கு; அந்தச் சரக்கு சர்வதேசத் தரம்வாய்ந்ததாய்த் தயாரிக்கப்படாத வரைக்கும் இனிவரும் நூற்றாண்டு களில் அது உள்ளூரில் விலைபோகவும் உத்தரவாத மில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :