செந்தமிழ் நாட்டுச் சேரிகள்

ஆசிரியர்: டி.ஏம்.மணி

Category வரலாறு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 94
First EditionAug 2008
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

நீண்ட காலமாக நான் தலித் மக்களுக்கு சேவை செய்து வருகின்றேன். எண்ணற்ற துன்பங்களையும், துயரங்களையும், 'சிறை வாசங்களையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறேன். நான் நடத்தி வந்த இயக்கத்தின் மூலம் பெரியார் அம்பேத்கார் கருத்துக்களோடு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளையும் கூறி வந்துள்ளேன். தலித் மக்களுக்கு சேவை செய்ய இக்கொள்கைகள் தான் அடிப்படையானது. நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இப்போது என் பெயர் உமர் ஃபாருக். நான் ஒரு தீண்டத் தகாதவன் என்ற உணர்வு 'என்னை விட்டுப் போய்விட்டது. இதனால் எனது தலித் 'சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இஸ்லாம் தான் ஒரு உண்மையான சீர்திருத்த மார்க்கம்.......
தலித்துக்களால் படைக்கப்பட்டவைகள் யாவும் தலித் இலக்கியம் என்றால், திருவள்ளுவரை தலித் என்று சொல்லப்படுவதால் திருக்குறளும் தலித் இலக்கியேமே என்றாகிவிடும். திருக்குறள் தனது காலத்தில் தலைவிரித்து 'ஆடிய சாதியக் கொடுமைகளைப் பற்றி எதுவுமே பேசாவிட்டாலும், அதை தலித் இலக்கியம் என்று அறிவித்து அதை தீட்டுப் படுத்திவிட யாரும் தயாராக இல்லை . தலித் மக்களின் வாழ்க்கையில் உள்ள அவலங்களை படம் பிடித்து காட்டும் இலக்கியங்கள் எல்லாமே தலித் இலக்கியங்கள் என்றால், தொண்ணூறுகளுக்கு பிறகு தலித்துகளின் வாழ்க்கையை இலக்கியங்களாக படைத்த பொதுவுடமை வாதிகளின் படைப்புகள் எல்லாமே தலித் இலக்கியங்கள் தான். ஆனால், இந்த பொதுவுடமை வாதிகள் எப்போதுமே தலித்திய அடையாளங்களுக்குள் அடங்க விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் வர்க்கங்களை மட்டுமே பிரிவுகளாக பார்ப்பவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :