சித்தர் உடல் தத்துவம்

ஆசிரியர்: எஸ்.பி.ராமச்சந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 180
First EditionMay 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹75 $3.25    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உலகில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறைகளுள் ஒன்று சித்த மருத்துவம், இம்முறை குறித்துத் தோன்றிய பாக்கள் - ஏடுகள். எல்லாம் தமிழிலேயே உள்ளதால், இது தமிழர்களிடையே வளர்ந்த தனிமருத்துவம் எனப்படும்.
சித்தர் கண்ட மருத்துவ முறை என்றும். சித்தி தரும் மருத்துவ முறை என்றும் இதற்கு விளக்கம் கூறுவர். சித்தர்களாகச் சிறந்தோர் மனக்கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி (யோகம்) ஆசனம் முதலானவற்றால் அன்றி, தமது அரிய மருந்துகளைப் பயன்படுத்தியும் 'சித்தி' பெற்றனர் என்பர்.

| சித்தர்களின் நூல்களைப் பற்றிய பரிமாணங்களை அறியாதவர்களே சித்தர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்தார்கள். பதினாறாம் நூற்றாண்டில் இருந்தார்கள் என்று பேசுவார்கள். செடி, கொடி, புல், பூண்டிலிருந்து கற்கள், மணல், மண், மலை அவற்றில் உண்டாகும் உப்புக்கள் பாஷாணங்களைப் பற்றியெல்லாம் சித்தர்கள் கூறும் வேதியல் விளக்கங்களைப் படிக்கும்பொழுது ஒரு மனிதன் அல்லது அவன் தலைமையில் உள்ள ஒரு குழு ஒரு நூற்றாண்டில் அல்லது ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடித்திருக்கக் கூடிய காரியமா இது என்று மலைத்துப் போகிறோம்.
சித்தர்கள் செடி, கொடிகளைப் பற்றிக் கூறியிருக்கும் வேதியல் உண்மைகளை ஆராயத் தொடங்கினாலே பல ஆய்வுக் கூடங்களில் பட்டாளம் பட்டாளமாக விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு நடத்த வேண்டியிருக்கும்.
சித்தர்கள் காயசித்திக்கே முதலிடம் கொடுத்தனர். சுவற்றை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும். 'உடம்பார் அழியின் உயிரார் அழிவார்', பிறகு அதோடு எல்லாம் முடிந்துபோகும். உயிரைக் காப்பாற்றிக் கொண்டுதான் ஆன்ம விடுதலை என்ற குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும். அப்படி யென்றால் உடம்பைக் காப்பாற்றியே ஆக வேண்டும். காயத்தைச் சித்தி செய்தே ஆக வேண்டும் என்று நெறிவகுத்தனர். --
உலகில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறைகளுள் ஒன்று சித்த மருத்துவம், இம்முறை குறித்துத் தோன்றிய பாக்கள் ஏடுகள். எல்லாம் தமிழிலேயே உள்ளதால், இது தமிழர்களிடையே வளர்ந்த தனிமருத்துவம் எனப்படும்.சித்தர் கண்ட மருத்துவ முறை என்றும். சித்தி தரும் மருத்துவ முறை என்றும் இதற்கு விளக்கம் கூறுவர். சித்தர்களாகச் சிறந்தோர் மனக்கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி (யோகம்) ஆசனம் முதலானவற்றால் அன்றி, தமது அரிய மருந்துகளைப் பயன் படுத்தியும் 'சித்தி' பெற்றனர் என்பர்.

உங்கள் கருத்துக்களை பகிர :