சமற்கிருதத்தின் தாய்மொழி தமிழே

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹175 $7.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கடந்த காலங்களில் இந்திய மொழிகளை ஆய்வு செய்தவர்கள், தமிழையும் சமற்கிருதத்தையும் தனித்தனியான அடையாளங் காட்டினர். அம்முடிவு, ஐரோப்பியச் சிந்தனையாளர்களால் எடுக்கப்பட்டது. உலக மொழிகள் பற்றி ஐரோப்பியர்களே கொள்கை முடிவுகள் எடுத்து அறிவித்தனர். அவை முழுமையான வரலாறுகளைத் தொடாமலும், வரலாற்றின் இடையில் நுழைந்து எடுத்த தெளிவற்ற முடிவுகளுமாகும், ஐரோப்பியர்கள் கூறியவற்றையெல்லாம் வேதவாக்காக இந்தியர்கள் ஏற்றுக் கொண்டனர். ஐரோப்பியரின் ஆய்வுகள் தவறானவை என்று இந்திய ஆய்வாளர்கள் எவரும் சுட்டிக்காட்ட முன் வரவில்லை. இந்திய ஆய்வாளர்களும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த கால அளவையே தொடக்கமாகக் கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஆரியரின் வருகைக்கு முன்பே, நீண்ட நெடிய வரலாறு தமிழர்களுக்கு இருந்தது என்பதை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.
அத்தமிழே உலக மொழிகளின் தாய்மொழி, தமிழே ஆரியத்துக்கு மூலம்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி ஆவது தமிழே; என்னும் கொள்கைகளை உலகப் பேரறிவர் சான்றொடும் உள்ளார்ந்த ஆய்வொடும் நிறுவுவதே தமது வாழ்வாகக் கொண்டு, அசைக் கொணாச் சான்றுகளுடன் நூல்களைப் படைத்தவர் பாவாணர்.
திரு. ம.சோ. விக்டர் அவர்கள், தம் ஆழிய ஆய்வொடும், கால வளர்ச்சியாலும் தம் உள்ளொளியாலும் மேலும் மேலும் அக்கொள்கைகளை நிறுவ ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துவரும் தமிழ்த் தாயின் தவப்புதல்வர்.
சமற்கிருத மொழியைச் சமயத்தின் பேரால் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களில் சிலருக்கு, சமற்கிருத வரலாறும் தமிழ் வரலாறும் தெரியவில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது. தொன்மக்கதைகளும் இலக்கியங்களும் தரும் சான்றுகளை முடிந்த முடிவாக இன்றைய அறிவியல் பார்வை யும், அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் ஏற்றுக் கொள்வதில்லை. நம்பிக்கை என்ற பற்றுக் கோடு, ஆய்வுக் கண்ணோட்டங் களைப் புறந்தள்ளிவிடும். சமய நூல்கள் வரலாற்று நூல்கள் ஆகா; எனினும் வரலாற்றுச் செய்திகள் ஆங்காங்கே காணப் படுவதையும் மறுக்க இயலாது.

உங்கள் கருத்துக்களை பகிர :