சடங்குகளின் கதை!-2

ஆசிரியர்: ராமானுஜ தாத்தாச்சாரியார்

Category பகுத்தறிவு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 152
First EditionJan 2006
4th EditionJan 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150 $6.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சமீபத்தில் நாவல்பாக்கம் என்கிற ஊருக்கு என் இஷ்டமித்ர பந்து ஒருவரின் சதாபிஷேகத்துக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கே என்னை சந்தித்த அநேகரும். "நீர் என்ன நெனைச்சுண்டிருக்கீர்? ஹிந்து மதத்தை கேவலப்படுத்துறதுனு முடிவு பண்ணிட்டீரா? அதுவும் நக்கீரன்குற ஒரு பத்திரிகையில் இப்படியெல்லாம் எழுதறது அடாண்டம்." என போர்க்கொடி தூக்கினர். நான் கேட்டேன். "நக்கீரன் யார்? போக்கிரியா? ஜல விரோதியா? அவன் ஜனங்களுக்கெல்லாம் உண்மைய எடுத்துச் சொல்றான். நான் புஸ்தகங்கள்ல நம்ம முன்னோர்கள் எழுதின விஷயத்தைதான் எடுத்துச் சொல்றேன். நக்கீரன்ல அதை எழுதறா.. இதுல என்னடா தப்பு இருக்கு? னு கேட்டேன், பேசாம வாயை மூடிண்டு போயிட்டானுங்க. நக்கீரன் பத்திரிகையின் எடிட்டர் என்னைப் பார்க்க அவரது தம்பிகளோடு வந்திருக்கார். அப்போது அவர்கிட்ட சொன்னேன், மத்தவன் சொல்ல பயப்படற விஷயங்களை நீ சொல்றே. ரொம்ப தைரியமா சொல்றே. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் அவ்வளவுதான். நீ மகாபுருஷன்னு அவருக்கு ஆசிர்வாதம் செஞ்சேன். உண்மை அதுதான். நக்கீரன் பத்திரிகையில் என் கருத்துக்கள் தொடர்ந்து வந்தபோது- பலபேர் என்னை மிரட்டினார்கள். பகவானும், நக்கீரனும் சேர்ந்து என்னை தைரியப்படுத்தினார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :