குமரிக்கண்டம்

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 336
First EditionApr 2012
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹275 $12    You Save ₹2
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஞாலத்தின் தோற்றம், உயிரினத் தோற்றம், வளர்ச்சி, மாந்த வினத்தோற்றம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகளில் நிகழ்வுற்ற செய்திகளை அறிவியல் விளக்குகின்றது. கோண்டுவானா என்ற நிலப்பரப்பு, ஞாலத்தின் தென்பகுதியில் நிலைபெற்றிருந்ததாக வும், அந்நிலப்பரப்பு இயற்கையின் மாற்றங்களால் பிரிந்து போனதாகவும், அப்பெருநிலப் பரப்பினின்றும் பிரிந்த பகுதியே, குமரிக்கண்டம் என்று தமிழர்களாலும், இலெமூரியா என்று மேலைநாட்டவராலும் அழைக்கப்பட்டதாக அறியலாம். இப் பிரிவுகள் பற்றிய கொள்கையைப் புவியியலாரும் உறுதி செய்கின்றனர்.
எனது முந்திய நூல்களில் குமரிக்கண்டத்தின் தோற்றம் பற்றிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. குமரிக்கண்டம், மகர - கடகக் கோடுகளுக்கு இடையேநில நடுக்கோட்டை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இவ்வமைப்பே இக்கண்டத்தில் உயிர்த்தோற்ற வளர்ச்சிக்கும், மாந்தவினத் தோற்றத்துக்கும் கரணியமாயிற்று. குமரிக்கண்டத்தின் தோற்றம் பல இலக்க ஆண்டுகளுக்கு முன்பு அறியப்படுகின்றது. கொண்டுவானா. என்ற நிலப்பரப்பின் புதிய பகுதியாகக் குமரிக் கண்டம் அமைந்திருந்தது எனலாம்.குமரிக் கண்டம் என்ற நிலப்பகுதி, உண்மையில் நிலை பெற்றிருந்ததா என்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களிடையே காணப்படுகின்றன. வரலாற்றுக் காலத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அறியப்படும் குமரிக் கண்டம் பற்றிய செய்திகள், தமிழ் இலக்கியங்களில் நேரிடையாகவும், மேலைநாட்டு இலக்கியங்களில் மறைபொருளாகவும் சொல்லப் பட்டுள்ளன.

குமரிக்கண்டம் என்ற தலைப்பில் இதற்கு முன்பும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவை இறையனார் அகப்பொருள் தந்த குறிப்புகளையும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் சில வரிகளையும் மேற்கோளாகக் கொண்டு எழுதப்பட்டன. குமரிக் கண்டம் பற்றி வேறந்த செய்திகளும் கிடைக்காத நிலையில், உரைக்கப்பட்ட செய்திகளே மீண்டும் மீண்டும் உரைக்கப் பட்டன், தேவநேயப் பாவாணர் அவர்கள், புதிய நோக்கில் குமரிக் கண்டத்தை அணுகினார். குமரிக் கண்டம் என்பது ஒரு கற்பனைக் கண்டமேயென்றும், அவ்வாறு ஒரு நாடு இருந்த தில்லையென்றும், தமிழரின் பெருமைகளைத் தாங்கிப்பிடிக்க, தமிழர்கள் கூறிக்கொண்ட சான்றுகளற்ற நிலமென்றும், தமிழறி ஞர்களில் பலரும் கூறிவந்துள்ளனர். பாவாணர் அவர்கள், குமரிக்கண்டம் பற்றிய தனது ஆய்வுக்கட்டுரையை முனைவர் பட்டத்துக்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய போது, தொடக்க நிலையிலேயே, அடிப்படைச் சான்றுகளில் லாதது என்று கருதப்பட்டு, அக்கட்டுரை புறந்தள்ளப்பட்டது. அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த செய்திகளைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் அப்பல்கலைக் கழகத்திலிருந்த தமிழறிஞர்களுக்கு இருந்திருக்கவில்லை . ஒரு பேரறிஞனுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்பளிக்கவில்லை என்ற குறைபாடு இன்றும் நீக்கப்படாமல் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :