காரைக்காலில் நுண்கலைகள்

ஆசிரியர்: சித்ரா கோபிநாத்

Category நாட்டுப்புறவியல்
Publication கங்கை புத்தக நிலையம்
FormatPaperblack
Pages 208
First EditionJul 2015
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"காரைக்காலில் நுண்கலைகள்" என்னும் இந்த இனிய நூலின் ஆசிரியர் திருமதி. சித்ரா கோபிநாத், புகழ் பெற்ற கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பாட்டி பத்மாவதி அம்மாள் தேசியத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் முன்னிலையில் நடனமாடி இருக்கிறார். தம் தாயாரிடம் இளம் வயதிலேயே நடனப் பயிற்சி பெற்றவர். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பரத நாட்டியத்துக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றவர். * தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறையில் 'நுண்கலை வளர்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தின் பங்களிப்பு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். "நாட்டியாலயா" என்னும் பரதப் பள்ளியை 15 ஆண்டுகளுக்கு முன்னர் காரைக்காலில் நிறுவி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை 16 பேருக்கு அரங்கேற்றமும் செய்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, துபாய் போன்ற நாடு களிலும், பிற மாநிலங்களிலும் இவரது மாணவியர் புகழுடன் திகழ்கின்றனர். ' பரதக் கலையில் மட்டுமின்றி, முத்தமிழிலும் வல்லவராக சிறந்த படைப்பிலக்கிய வாதியாக விளங்குகின்றார். இவரது படைப்புக்கள் "ஆனந்த விகடன்", "குமுதம்", ''தினமலர்-வார மலர்", "மங்கையர் மலர்" போன்ற பல்வேறு முன்னணி இதழ்களிலும் வெளியாகியுள்ளன. "ஆனந்த விகடன்" வைர விழாப் போட்டியில் கல்லூரி மாணவியருக்கான நாடகப் போட்டியில் முதற் பரிசு 25,000 ரூபாயும் மற்றும் தனித் திறமைக்காக 5,000 ரூபாயும் பெற்றிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. "நாட்டிய மயூரி", "நாட்டியத் திலகம்", "கலைக்கோமாமணி" போன்ற விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. செய்யாறு தமிழ் நுண்கலை மன்றம் "சிந்தனைச் செல்வி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது. இரண்டு பெண் குழந்தைகளின் அன்னையாக விளங்கும் திருமதி. சித்ரா கோபிநாத், தம் கலைப் பயணத்தின் வெற்றிக்கு அருமைத் துணைவர் திரு. கோபிநாத் பெருந்துணையாக இருந்து வருவதைப் பெருமையுடன் கூறி மகிழ்கிறார். பரதக் கலையில் தொடர்ந்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவதில் முனைப்பாக உள்ளார். இவரது எண்ணங்கள் ஈடேற, வெற்றிப் பயணம் தொடர் இறையருளை வேண்டுவோமாக.- கலைமாமணி, சாதனைச் செம்மல், பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்

உங்கள் கருத்துக்களை பகிர :