கமலின் கலை(ல)ப்படங்கள்

ஆசிரியர்: பி.ஆர். மகாதேவன்

Category சினிமா, இசை
Publication நிழல்
FormatPaperback
Pages 160
First EditionDec 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சூரியனை மறைக்கும் சூன்யம் வானில் சூரியன் போல் தரமான திரைப்படங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்க, அதைக் காணவிடாமல் தமிழ் பார்வையாளர்களின் கண்ணை மறைக்கும் பிரமாண்ட மறைப்புகளில் பிரதானமானது உலக நாயகனின் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம், நடிகர் என்ற அளவில் ஓரளவுக்குப் பொருட்படுத்தத்தகுந்த அவர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வானில் பறக்கவிட்டிருக்கும் ராட்சஸ பலூன்களை கலையின் சிறு ஊசி யால் இந்தப் புத்தகம் குத்திப் பார்க்கிறது. தமிழின் மிகச் சிறந்த கலைஞன் என அவராலும் அறியாமையில் உழலும் அவருடைய ரசிகர்களாலும் ஆதித் தொழிலின் அனைத்து நுணுக்கங் களையும் கற்றுத் தேர்ந்த ஊடகங்களாலும் பிரதிபலன் சார்ந்து நட்புறவு கொள்ளும் பிற மொழி - நாட்டு கலைஞர்களாலும் முன்னிறுத்தப்படும் ' பிம்பத்தை இந்தப் புத்தகம் வெகு எளிதில் உடைக்கிறது. ஹேராம், விருமாண்டி, தேவர் மகன், அன்பே சிவம், குருதிப்புனல், குணா என கமல்ஹாசன் நடிப்பு தாண்டிப் பங்களித்த ஆறு படங்களின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் இருக்கும் ஆதாரமான குறைபாடுகள் இந்தப் புத்தகத்தில் விரிவாக அலசப்பட்டிருக்கின்றன. நல்ல படங்கள் எப்படி இருக்கும் என்ற முழு புரிதலை இந்தப் புத்தகம் தந்துவிட முடியாது என்றாலும் மோசமான படங்களை அடையாளம் கண்டு கொள்ள நிச்சயம் பெரிதும் உதவும். தரமான படத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்,

உங்கள் கருத்துக்களை பகிர :