எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 216
First EditionJan 2012
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹180 $7.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அரியலூர்த் தமிழ்ச் சங்க நிறுவனர் ம.சோ. விக்டர் எழுதிய "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே” என்னும் நூலைப் படித்துச் கவைத்தேன். நக்கீரர் நல்கியதாக நம்பப் பெறும் இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லார் அருளிய சிலப்பதிகார விரிவுரையும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பழந்தமிழர் பெருமையைப் பறைசாற்றுகின்றன. முதற் சங்கத்தைத்தென் மதுரை யாகிய குமரிக் கண்டத்தில் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் எண்பத்தொன்பது மன்னர்கள் பேணிப் புரந்தனர். இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் ஐம்பத்தொன்பது மன்னர்களால் பேணப் பட்டதாகவும் மூன்றாவது சங்கம் இன்றுள்ள பழங்கா நத்தம் மதுரையில் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள் நாற்பத் தொன்பது அரசர்களால் பேணிப் போற்றப்பட்டதாகவும் அறிகிறோம். பன்னீராயிரம் ஆண்டு இலக்கிய இலக்கண வரலாறு கொண்ட ஒரே மொழி உலகில் தமிழ் மொழியே என்பது பெருமிதம் தரும் செய்தியாகும்.
தமிழகத்தில் இதுநாள் வரையிலும் தமிழறிஞர் களோ, மொழிவல்லுனர்களோ, மேற்கொள்ளாத அரிய ஆய்வினை வரலாற்றிற்கு அப்பாற்பட்டு, தொலைநோக்கில் செய்து, தொல் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஆதலினால் இந்நன் னூலை தமிழர்க்கு நன்கொடையாக வழங்கியுள்ள நண்பர் விக்டர் அவர்களை, நற்றமிழால் நாமணக்க, வாய்மணக்க, நெஞ்சினிக்க வாழ்த்தி மகிழ்கின்றேன்.
தமிழ் மொழியின் பரவல் என்ற கொள்கையில், இன்றும் கூட தெளிவுபடுத்த இயலாத கூறுகள் உள்ளன. தமிழ்மொழி யானது கி.மு. 15,000-10,000 ஆண்டுகளில் பாபிலோன், பார்த்தியம், ஃபோனீசியா, கானான் நாடு என்ற பாலத்தீனம் போன்ற நாடு களில் பேசப்பட்டன என்று சொல்லப்படும் போது, அந்நாடுகள் பற்றியும், அந்நாட்டின் பழங்கால வரலாறுகள் பற்றியும், அங்கு வாழ்ந்திருந்த மக்கள் பற்றியும், அம்மக்களின் இனம், மொழித் தொடர்புகள் பற்றியும், தெரிந்திருந்தாலொழிய அப்பகுதி மொழி களை ஆய்வு செய்வதும், அந்த ஆய்வுகளைப் படிப்பதும் கோர்வையற்றுப் போகும், இடைவெளிகளோடு துண்டிக்கப் பட்ட வரலாற்று நிகழ்வுகள், உண்மையான செய்திகளையும் தர இயலாது. எனவேதான் இந்நூலின் முதல் பகுதியில், வர லாற்றுத் தொடர்பான செய்திகளும், இரண்டாம் பகுதியில், மொழியியல் தொடர்பான ஆய்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :