எபிரேயத்தின் தாய்மொழி தமிழே

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 368
First EditionJan 2005
0th EditionJan 2014
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$13      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

எபிரேயத்தின் தாய்மொழி தமிழே” என்னும் நூலைப் படித்துச் கவைத்தேன். நக்கீரர் நல்கியதாக நம்பப் பெறும் இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லார் அருளிய சிலப்பதிகார விரிவுரையும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பழந்தமிழர் பெருமையைப் பறைசாற்றுகின்றன. முதற் சங்கத்தைத்தென் மதுரை யாகிய குமரிக் கண்டத்தில் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் எண்பத்தொன்பது மன்னர்கள் பேணிப் புரந்தனர். இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் ஐம்பத்தொன்பது மன்னர்களால் பேணப் பட்டதாகவும் மூன்றாவது சங்கம் இன்றுள்ள பழங்கா நத்தம் மதுரையில் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள் நாற்பத் தொன்பது அரசர்களால் பேணிப் போற்றப்பட்டதாகவும் அறிகிறோம். பன்னீராயிரம் ஆண்டு இலக்கிய இலக்கண வரலாறு கொண்ட ஒரே மொழி உலகில் தமிழ் மொழியே என்பது பெருமிதம் தரும் செய்தியாகும்.

எனும் உன்னத குறிக்கோளோடும், உலகளாவிய நோக்கில் உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் பெருமையினை உலகுக்கு உணர்த்திட ஆய்வு நூல் கண்டவர் அருமை நண்பர் ம.சோ. விக்டர் அவர் கள். உலகமொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி, முதன்மை மொழி, மூலமெழி தமிழே என்பதை, உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள பல சொற் களுக்கு தமிழ்ச் சொற்களே மூலமாக, வேராகு அமைந்துள்ளதை சான்று காட்டி விளக்கம் கூறி யுள்ளமை பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழகத்தில் இதுநாள் வரையிலும் தமிழறிஞர் களோ, மொழிவல்லுனர்களோ, மேற்கொள்ளாத அரிய ஆய்வினை வரலாற்றிற்கு அப்பாற்பட்டு, தொலைநோக்கில் செய்து, தொல் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஆதலினால் இந்நன் னூலை தமிழர்க்கு நன்கொடையாக வழங்கியுள்ள நண்பர் விக்டர் அவர்களை, நற்றமிழால் நாமணக்க, வாய்மணக்க, நெஞ்சினிக்க வாழ்த்தி மகிழ்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :