எனக்கு வேலை கிடைக்குமா?

ஆசிரியர்: என்.சொக்கன்

Category சுயமுன்னேற்றம்
Publication மதி நிலையம்
FormatPaperback
Pages 160
First EditionOct 2012
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


மாணவப் பருவத்தில் இருக்கிற எல்லோருடைய மனத்திலும், 'அடுத்து என்ன?' என்கிற கேள்வி இருக்கும், படிப்பை முடித்தவுடன் எனக்கு உடனடியாக வேலை கிடைக்குமா? அதற்காக நான் என்ன செய்யவேண்டும்? நமது கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் பாடங்களுக்கும், வெளியே கம்பெனிகள் எதிர்பார்க்கிற திறமைகளுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப தங்களைத் தயார் செய்துகொள்கிறவர்கள் மட்டும்தான், வேலை தேடும் சவாலில் உடனடி வெற்றி காண்கிறார்கள். இன்றைய உலகத்தில் வேலை தேடுகிறவர்களுக்கு என்னென்ன திறமைகள் தேவை, அவற்றை வளர்த்துக் கொள்வது எப்படி, நம்முடைய தகுதியை வேலை தரப்போகிறவர்களிடம் சரியான முறையில் முன்வைப்பது எப்படி, எந்தெந்த வேலைகளுக்கு எப்படித் தயார் செய்துகொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்று சகல நுட்பங்களையும் விரிவாகச் சொல்லித்தரும் கையேடு இது. நூலாசிரியர் என். சொக்கன், மென்பொருள் துறையில் பதினைந்து வருடங்களாகப் பணியாற்றிவருகிறவர். பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறவர். அந்த அனுபவத்தின் அடிப்படையில், வேலை தேடுவோரிடம் நிறுவனங்கள் எதையெல்லாம் எதிர்பார்க்கின்றன என்கிற விவரத்தை மிக எளிமையானவிதத்தில் வழங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :