உபசாரம்

ஆசிரியர்: சுகா

Category சிறுகதைகள்
Publication தடம் பதிப்பகம்
Pages 164
First EditionJun 2016
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 2 cms
₹130 $5.75    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நகைச்சுவை இக்கட்டுகளில் உருவாக வேண்டியதில்லை. அபத்தங்களாக வெளிப்பட வேண்டியதில்லை. சும்மா திருவண்ணாமலைக்குப் போய்வந்த அனுபவமாகவே இருக்கலாம் அது. 'ப்ரியன்' என்று இந்த அழகியலை மலையாளத்தில் சொல்வார்கள். இயல்பிலேயே வாழ்க்கை ஒரு வேடிக்கைதான் என எண்ணும் ஓர் இலகுத்தன்மையை சாராம்சமாகக் கொண்ட எழுத்து அது. ஆங்கிலத்தில் வில்லியம் சரோயனின் அராம் கதைகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம். அசோகமித்திரனின் லான்ஸர் பாரக் கதைகளை எண்ணிக்கொள்ளலாம். புதுமைப்பித்தனின் பூசணிக்காய் அம்பியில் இதன் முன்வடிவைக் காணலாம். மொழியின் நுட்பமான ஒரு இடம், பண்பாட்டுக் குறிப்புணர்த்தல்களால் ஆன ஒரு தளம் இது. மணமுள்ள நெல்லையை சுகாவின் எழுத்தில் வாசிக்க முடிகிறது. விஞ்சை விலாசும் இருட்டுக்கடையும் கொண்டுள்ள மணம் அது.

உங்கள் கருத்துக்களை பகிர :