இயற்கை வேளாண்மை

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 136
First EditionJan 2004
5th EditionAug 2016
Weight150 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 1 cms
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தோரண வாயில் மானுடம் நிலைத்திருக்க வையத்து புதுமை செய்வோம்!
எனது நெஞ்சிற்கினிய உள்ளங்களுக்கு, இது ஒரு திறந்த அஞ்சல் உங்களுக்குள்ள நேரப் பற்றாக்குறை நான் அறிந்ததே. "உடம்பைச் சுற்றி மொல்லை இருக்குது ஒண்ணுக்கு ஆயிரமா” என்று ரியோட்டுத் தாத்தா பாடியது நினைவில் இருக்கத் தான் செய்கிறது. ஆனாலும் பல வேலைகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டியுள்ளது.
நீண்டதொரு முன்னுரையின் வழியாக உங்கள் நெஞ்சத்தைத் தொட்டும் பார்க்க விரும்புகிறேன். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். படித்து விட்டு கீழே வையுங்கள். கீழே வைக்கும் முன் முடிவெடுங்கள். உங்களின் முடிவு பூமியின் இந்தப் பகுதியில் மாற்றம் நிகழத் துணை செய்யப் போகிறது. படியுங்கள்.
ஒரு கவிஞன் இப்படி எழுதினான். "காலம் என்பது நீண்டதொன் மணல் பாதை. அதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறார்கள். அப்படிச் சுவட்டை விட்டுச் சென்றவர்களின் பாரதியும் ஒருவன்". அவன் இப்படி எழுதினான். "மானுடரே நீவிர் பாடு படல் வேண்டா ஊனுடலை வருத்தாதீர்; உணவு இயற்கை கொடுக்கும்: உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!" நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலை பெற்று விட்டதாகக் கனவு கண்ட பாரதியின் கருத்தைப் புறந்தள்ளினோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :