இயற்கையின் அற்புத உலகில்

ஆசிரியர்: பேரா. எஸ். சிவதாஸ் தமிழில் : உதயசங்கர்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 114
First EditionDec 2016
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$3.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

“ஏன் குயிலம்மா காக்கைக் கூட்டில் முட்டை இடுகிறாள்?" குட்டிப்பாப்பா மறுபடியும் அந்த சந்தேகத்தைக் கேட்டாள். “அதுவும் இயற்கையன்னையின் தந்திரம் என்று நான் சொன்னேன் இல்லையா? காக்கைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான வித்தை அது..." “காக்கைகளை கட்டுப்படுத்தவா?" “ஆமா காக்கைகள் அதிகமாக பெருகி விட்டால் குழப்பமாகி விடும். அவை தின்க கழிவுகள் போதாமல் போய்விடும். அப்போது மற்ற பண்டங்களைத் தின்று தீர்க்கும். மற்ற பிராணிகளைத் தாக்கி அவற்றைக் கொல்லும். பறவைக் குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு போய்விடும். இயற்கையில் பேரழிவை உண்டாக்கி விடும்.'' “ஒண்ணும் புரியல அம்மா..." "சொல்றேன். காக்கைகள் அதிகமாகி விடாமல் இருக்க குயில் கள் காக்கைக் கூட்டில் முட்டையிடும். அப்போது சிலசமயம் காக்கா முட்டைகளைக் கீழே தள்ளிவிட்டு விட்டு முட்டை இடும். காக்கா அடைகாக்கும். முட்டைகள் பொரிந்து குயில் குஞ்சுகளும் வெளிவரும். குயில் குஞ்சுகள் அப்போது ஒரு குரூரமான காரியம் செய்யும்." “குரூரமான காரியமா? அது என்ன அம்மா?” “ஆமாம் காக்கைக் கூட்டில் இருக்கும் குயில் குஞ்சுகள் தன்னுடைய உடலை விரைத்து குளிர்காய்ச்சல்காரனைப் போலத் துள்ளும். உடம்பை மேலே உயர்த்தும் கீழே தாழ்த்தும். பைத்தியம் பிடித்தமாதிரி செய்யும். காக்கைக் குஞ்சுகளின் முதுகில் ஏறிமிதித்து வெளியில் தள்ளிவிடும். காக்கை முட்டை கள் இருந்தால் அவற்றையும் வெளியில் தள்ளிவிடும்...''

உங்கள் கருத்துக்களை பகிர :