இன்றைய காந்தி யார் ?

ஆசிரியர்: க. திருநாவுக்கரசு

Category ஆய்வு நூல்கள்
Publication தளபதி பதிப்பகம்
FormatPaperback
Pages 164
First EditionApr 2011
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹125 $5.5    You Save ₹3
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்நூலினுள்ளே .... ஒருமுறை விஷ விதையை ஊன்ற அனுமதித்துவிட்டால் அந்த “விஷ விருட்சம்” பெரிதாய் வளர்ந்துவிடும். அதற்குத்தான் தமிழ்நாட்டில் இருக்கிற 'வர்ணாசிரம சநாதன தர்மிகள்' எத்தனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். எல்லா மதத்தினரும் சாதியினரும் இணக்கமாய் உறவினராய் வாழ்வதும் அமைதியாய் இருப்பதும் அவர்களுக்குப் பிடிக்காது. பிற மதத்தினரைப் பழி தூற்றுவது, அண்டவிடாமல் விரட்டுவது, இணக்கத்தைக் குலைப்பது, சிண்டு முடிவது, சீண்டிப் பார்ப்பது, கோபமூட்டுவது, இதமாய் சொல்லுவது, உறவு கொண்டாடுவது, எல்லாம் இங்கிருந்து சென்றவைதான் என வேதத்தைக் காட்டுவது என்று பல தந்திரங்கள் நிரம்பியவர்களின் அக்னி கூடாரத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். அதனால்தான், அவர் இந்துவல்லாத மதங்களைத் தாக்குகிறார். . இடதுசாரிகளை கம்யூனிஸ்டுகளை நகையாடுகிறார். திராவிட .. இயக்கத்தை ஏளனம் செய்கிறார். பெரியார், அம்பேத்கரை சாடுகிறார். பின் மயிலிறகால் நீவுகிறார். காந்தியைச் சார்ந்து எழுதுவதுபோல எழுதி ஆதரிப்பதாய்க் காட்டி. மராமரத்தின் பின் ஒளிந்திருந்து தாக்கும் கலையை ஜெயமோகன் நன்றாகப் பயின்று இருக்கிறார். கபாலிகர்கள் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து பயமுறுத்துவதுபோல நூல்களை எல்லாம் நற்சான்று காட்டி மயக்குகிறார். ஜெயமோகன்களின் எந்த உருவத்தையும் நாம் கண்டறிந்து நாட்டு மக்களுக்குச் சொல்லுவோம் என்பதன் அறிவாயுதத்தின் அடையாளம்தான் 'இன்றைய காந்தி யார்? என்கிற இந்நூலாகும்.
இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக் களத்துக்கு வலுவூட்டி முனைப்புடன் முன்னெடுத்துச் சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் சுருக்கமாய் மூன்றெழுத்தில் காந்தி என்பார்கள். இந்திய மண்ணில் எல்லா மக்களாலும் அறியப் பெற்று மரியாதையுடன் இந்தியாவுக்கும் - சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்' என்று சொல்லி அவரை ஒரு மகா ஆத்மாவாகவே உருவகப் படுத்தி விட்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிலவிய அரசியல் சமூகச் சூழல்களும், இந்தியா போன்ற காலனி நாடுகள் தங்களுக்குப் பெருஞ்சுமையாகவும், பிரச்சனைகளின் ஊற்றுக் கண்களா கவும் இருந்தமையால் அந்த நாடுகளைத் தம் ஆதிக்கத்தி லிருந்து விடுவித்து விடலாம் என்று பிரட்டிஷ் அரசே முன்வந்து முடிவு செய்ததாலுந்தான், இந்தியா விடுதலை பெறும் நிலை உருவாயிற்று என்று இந்திய விடுதலை பற்றி ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். இருப்பினும் காந்திக் கென்று உள்ள உலகளாவிய பெருமை, புகழ் போன்றவற்றைக் கொச்சைப் படுத்துவது போல அவரது வழக்க, ஒழுக்கங்கள், தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள், சமயம் - சமூகம் பற்றிய சிந்தனைகள் பற்றிக் காந்தியைச் சிறுமைப் படுத்துமாறு எழுதி இருக்கிறார் ஜெயமோகன்.

உங்கள் கருத்துக்களை பகிர :