இந்துமத இணைப்பு விளக்கம்

ஆசிரியர்: ஆறுமுக நாவலர்

Category ஆன்மிகம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 232
First EditionJan 1991
4th EditionJan 2007
Weight200 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்துகொள்ள முடியாத முறையில் அமைந்திருப்பதாலும், அத்தத்துவங்களை யாவரும் நன்கு ணருமாறு எளிய இனிய தமிழில் ஓர் இந்துமத நூல் வெளியிடவேண்டுவது இன்றியமையாததாயிற்று. |
இந்து மதத்தில் உள்ள அநேக கிளை மதங்களின் அடிப்படைக் கருத்து ஒன்றேயாயினும், அவை வேறுபட்டனபோலப் பிரிந்து ஒன்றோடொன்று மாறுபட்டு ஒற்றுமை இல்லாதிருப்பது இந்து மதத்தின் பொது வளர்ச்சிக்கு இடையூற்றினை விளைவித்து வருகின்றது. ஆதலின், அக்கிளைகள் அனைத்தையும் இணைத்துப் பொதுக்கொள்கைகளை மேற்கொண்டு இந்து மதத்தை உருப்படுத்தி வளர்க்க வேண்டுவது அவசியமாகும். அது கருதியே இந்துமதி இணைப்பு விளக்கம் எனும் இந்நூல் வெளியிடப்படுகின்றது.


உங்கள் கருத்துக்களை பகிர :