இந்திரா, சந்திரா,மந்த்ரா!

ஆசிரியர்: ஜெயந்தி

Category சிறுவர் நூல்கள்
Publication கல்கி பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionNov 2013
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

குழந்தைகளுக்கான கதைகளில் தேவதை, பூதம், அரக்கன்... என்றெல்லாம் வருவது சகஜம். ஆனால், பள்ளிச் சிறுவர்களான இந்திராவுக்கும் சந்திராவுக்கும் மந்திரா என்ற தேவதையின் உதவி கிடைக்கிறது என்று தொடங்கும் கதை, அறிவியல், சமூகப் பொறுப்பு... என்ற தளத்தில் அற்புதமாகப் பயணிக்கிறது!இந்திராவுக்கும் சந்திராவுக்கும் கென்யாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் எதிர்பாராத விதமாக பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பிரச்னைக்குப் பின்னால் சில கொடிய சுயநலவாதிகள் இருப்பது தெரியவருகிறது. தங்களைக் காப்பாற்றும்படி தேவதை மந்திராவின் உதவியை நாடுகிறார்கள். மந்திராவின் உதவியுடன் இந்திராவும் சந்திராவும் தப்பித்தார்களா? கொடியவர்கள் சிக்கினார்களா?... அறிவியல் தகவல்களுடன் சுவாரசிய மாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் இந்த நாவலை, படிக்க ஆரம்பித்தால் இடையில் நிறுத்த இயலாது!கல்கி ராஜேந்திரன். கோகுலத்தின் முன்னாள் ஆசிரியர், புனை பெயர்களில் சிறுவர்களுக்காக சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதியவர். புத்தகமாக வெளிவரும் சிறுவர்களுக்கான அவரது முதல் நாவல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :