இதுதான் ராமராஜ்யம்

ஆசிரியர்: சுப வீரபாண்டியன்

Category ஆய்வு நூல்கள்
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 24
First EditionMar 2018
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

10 ஆண்டுகளுக்கு முன் இச்சிறுநூல், திராவிட இயக்கத்தமிழர் பேரவையினால் வெளியிடப்பெற்றது. அந்த ஆண்டே விற்றும் தீர்ந்து விட்டது. எனினும் மறு அச்சு கொண்டுவராமல் விட்டுவிட்டோம். ஆனால் இன்றைய அரசியல் சூழல் மீண்டும் இந்நூலின் தேவையை எங்களுக்கு உணர்த்தியது. சில நாள்களுக்கு முன்னர், ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு குறித்துச் சரியான புரிதல் இன்றி, அவர்கள் மதத்தை, அவர்கள் பரப்பக்கூடாதா என்று சிலர் கேட்டனர். ராம ராஜ்யம் என்பது, வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். ராம ராஜ்யம் ஏற்படுமானால் அது எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இப்போது அது காலத்தின் பெரும் தேவையாக உருவெடுத்துள்ளது.
உ.வே.சி.ஆர். ஸ்ரீநிவாச அய்யங்கார் B.A.," அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள "உத்தரகாண்டம் தமிழ் வசனம்” என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு இச்சிறுநூல் எழுதப்படுகின்றது. உத்தரகாண்டம் மொத்தம் 111 சருக்கங்களைக் கொண்ட நூல். இராமனின் ஆட்சி, அங்கு மக்களின் நிலை, சீதைக்கு நேர்ந்த நிலை, இராம, இலக்குவர்களின் மரணம் முதலான பல செய்திகள் அக்காண்டத்தில் உள்ளன. இராமன் அயோத்தியை 11,000 ஆண்டுகள் ஆண்டதாகவும், இறுதியில் சரயூ நதியில் இறங்கித் தற்கொலை செய்து கொண்டதாகவும் உத்தரகாண்டம் கூறுகின்றது. அந்த 11,000 ஆண்டுகால ஆட்சி எப்படியிருந்திருக்கும் என்பதை அறிய, ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதமாக, இரண்டு நிகழ்வுகள் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஒன்று, இராமன் ஆட்சியில் நாடு எப்படி இருந்தது என்பது; இன்னொன்று வீடு எப்படி இருந்தது என்பது.

உங்கள் கருத்துக்களை பகிர :